ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள "ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு" - ரயில்வே உத்தரவு
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறையை பின்பற்ற ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசாவில் விபத்து நேரிட்ட பகனகா பஜார் ரயில் நிலையத்துக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர். அங்கிருந்த லாக் புத்தகம் மற்றும் சில கருவிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரயில் நிலையங்களில் அமைந்துள்ள ரயில் கட்டுப்பாட்டு அமைப்புகள், லெவல் கிராசிங்களுக்கான தொலை தொடர்பு சாதனங்கள், சிக்னல் அமைப்புகள் ஆகியவை அடங்கிய ரிலே அறைகளுக்கு இரட்டைப்பூட்டு முறையில் பின்பற்றுமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
ஒடிசா ரெயில் விபத்துக்கு சிக்னல் அமைப்பு அடங்கிய ரிலே அறையில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பாதுகாப்பை அதிகரிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் விளக்கமளித்துள்ளது.
Comments